த.நவோஜ்-
கடந்த வருடம் 2013.07.12ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடமை நிமித்தம் கொழும்புக்குச் சென்று திரும்பும் வேலையில் பொலநறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டியில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிர் நீத்த சமுர்த்தி உத்தியோகத்தர்களின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திங்கள்கிழமை தாக சாந்தி நிகழ்வு வாழைச்சேனையில் இடம் பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி திணைக்களப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்ற தாக சாந்தி நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது வீதியால் பயணித்த அனைவருக்கும் குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)


0 comments :
Post a Comment