அக்கரைப்பற்று ஜூம்மா பெரிய பள்ளி வாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு




ஏ.ஜி.ஏ.கபூர் அக்கரைப்பற்று-

க்தி எப்.எம்.வானொலி சேவையின் முஸ்லிம் நிகழ்ச்சி பிரிவினால் வருடந்தோறும் புனிக ரமழான் காலங்களில் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பள்ளிவாசல் என்ற அடிப்படையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வுகளை சக்தி எப்.எம்.வானொலி சேவையின் அனுசரணையுடன் நடாத்தி வருகின்றது.

இச் செயற்றிட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் சனிக்கிழமை (26.07.2014) 28வது நோன்பு தினத்தில் மாலை அக்கரைப்பற்று ஜூம்மா பெரிய பள்ளி வாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சக்தி எப்.எம்.வானொலி சேவையின் முஸ்லிம் நிகழ்ச்சி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.அஸ்ரப் (ஷர்க்கி), அக்கரைப்பற்று ஜூம்மா பெரிய பள்ளி வாசல் நம்பிக்கையாளர்சபைத் உப தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி மேயருமான எம்.எம்.எம்.றிஸாம், பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளரும், ஓய்வு பெற்ற அதிபருமான எம்.பி.அப்துல் ஹமீத், பொருளாளரும், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.உமர் லெவ்வை, நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், ஓய்வு பெற்ற மாவட்ட உதவிப் பணிப்பாளருமான (இளைஞர் சேவை) ஏ.ஜி.ஏ.கபூர், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான ஓய்வு பெற்ற இலங்கை வங்கியின் மாவட்ட முகாமையாளர் எம்.ஹாமீட் லெவ்வை, ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியர் மௌலவி எம்.எம்.உதுமாலெவ்வை, ஆசிரியர் எம்.ஏ.ஜுனைதீன், வலயக் கல்விப் பணியக உத்தியோகத்தர் எம்.ஹக்கீம், யூ.எம்.மஹ்றூப், எம்.அபூதாலி உள்ளிட்ட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மௌலவிகள், பள்ளி வாயல் ஜமா அத்தார், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மருத்துவ பீட மாணவன் அல்-ஹாபிஸ் இக்பால் பர்ஹாத் அஹமட் அவர்களின் கிறாஅத்தினைத் தொடர்ந்து அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அஷ்ரப் (ஷர்க்கி) அவர்கள் நோன்பின் மகத்துவம் பற்றி பயான் வழங்கியதோடு துஆப் பிரார்த்தனையும் செய்தார். தொடர்ந்து அல்-ஹாபிஸ் இக்பால் சுலைம் அஹமட் அவர்கள் கஸீதா வழங்கினார்.

இறுதியாக இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :