பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்-சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் கலந்து கொண்ட மாபெரும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 15.07.2014 செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சின்ன உப்போடை ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ,சிங்கள மதத் தலைவர்களின் ஆசியுடன் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இவ் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன ,புனானை 23வது இராணுவ படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி அதுல கொடிபிலி ,மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் ஆயர் கலாநிதி .ஜோசப் பொன்னைய்யா ,மட்டக்களப்பு மக்களராமய விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமனரெத்ன தேரோ , மட்டு - முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் பொருளாளர் சமூக சேவையாளர் அஹமட் லெப்பை மீராசாஹிப் , மட்டு - முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் செயலாளர் என்.முஹம்மது பறூஸ் ஜேபி மற்றும் தமிழ்-சிங்களம்,முஸ்லிம்,கிறிஸ்தவ மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் ,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,பாதுகாப்பு உயரதிகாரிகள் ,உலமாக்கள் ,வர்த்தக பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது விஷேட மார்க்க சொற்பொழிவை ஜாமியா நழீமியா சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.அப்பாஸ் நழீமி நிகழ்த்தினார்.
இங்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் , புனானை 23 இராணுவ படைப்பரிவின் இராணுவ கட்டளைத் தளபதி அதுல கொடிபிலி,மட்டக்களப்பு சிவில் அமைப்புக்களின் தலைவர் மாமாங்கராசா ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இவ் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வருடா வருடம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இடம்பெற்றுவந்ததோடு கடந்த 2013ம் வருடத்திலிருந்து ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment