அஷ்ரப் ஏ சமத்
கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன; இனிவரும் காலங்களில் இந்த நாட்டில் இலவச கல்வியைக் கற்கும் மாணவர்கள் க.பொ. சாதாரண தரத்தில் கணிதபாடம் சித்தியடையாவிட்டாலும் அம் மாணவர்கள் க.பொ.த. உயர்தரம் படிக்க முடியும். அதற்கான அமைச்சரவைப் பத்திரம் வரையப்பட்டு அடுத்த வாரம் அமைச்சரவையினால் அனுமதி பெற உள்ளேன். என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
நேற்று(14) பத்தரமுல்லையில் உள்ள சிறி சுமங்கள சுபபோதி தேசிய பாடசாலையில் கூட்ட மண்டபத்தில் நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் பயிலும் கணிஸ்ட மாணவர்களுக்கிடையே கல்வியமைச்சு நடாத்திய ஒலிம்பியாட் (கணித,விஞ்ஞான) பாடங்களில் போட்டிகளில் திறமையெய்திய 100 மாணவர்களுக்கு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வியமைசச்ர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
கடந்த காலங்களில் நாம் எமது மாணவ சமுகத்திற்கு கல்வித்துறையில் துரோகம் இழைத்துவிட்டோம். கணித பாடம் சித்தியடையத் தவறிய மாணவனின் வாழ்க்கையின் எழுச்சிக்கும் எதிர்காலத்துக்கும் நாம் முற்றுப்புள்ளி வைத்து அம் மாணவனை உரிமைக்கு தவறிழைத்துள்ளோம். ஆகவே தான் இனிவரும் காலங்களில் கல்வித்துறையில் அந்த துரோகத்தை நாம் தெடர்ந்தும் இழைக்க விரும்பவில்லை. அதற்காகத்தான் கணிதம் பாடம் சித்தியெய்யாவிட்டாலும் அவன் தனது கல்வியை உயர்தரம் வரை தொடர அனுமதியளிக்கப்போகின்றேன். எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் எனக்கு கிடைக்கப்பெற்ற மாணவர்களது முறைப்பாடுகளில் ஒரு மாணவன் 8 பாடங்களிலும் பரிட்சைஎழுதியவனுக்கு கணித பாடப் பரிட்சை அன்ரு அவனுக்கு திடிரெண ஏற்பட்ட தலையிடி சுகவீணம் கார்ணமாக அவன் கணித பாடம் எழுதவல்லை. ஆனால் அம் மாணவனுக்கு பரீட்சை முடிபு 8 பாடங்களிலும் சித்தியெய்தியவனுக்கு கணிதபாடத்தில் சித்தியடையவில்லை. இந்த கார்ணத்திற்காக அவனை உயர்தர கற்பிபதற்கு பாடசாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் அம் மாணவன் விரக்தியடைந்த நிலையிலும் மனஉழைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டான். இதனால் அம் மாணவனின் எதிர்காலம் பழடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தான் அந்த மாணவனின் அடிப்படை உரிமைக்கு இந்த நாட்டில் உள்ள கல்விச் சமுகம் பதிலளிக்க வேண்டியுள்ளது.
கடந்த வாரம் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களில் தெரிவித்துள்ள கருத்தொன்றை இன்றைய பத்திரிகையில் நான் வாசித்தேன். அதில் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது “ போத்துக்கீசர்கள் இந்த
நாட்டை எவ்வாறு அழித்து குட்டிச் சுவராக்கினோர்களோ” அதே மாதிரித்தான கல்வியமைச்சரும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்த நாட்டின் கல்வித்திட்டத்தினை அழித்து குட்டிச்சுவாறாக்கியுள்ளார்கள். என தெரிவித்துள்ளார்.
நான் அவரிடம் கேட்க விரும்புகின்றேன். அவர் எந்த யுகத்தில் இருக்கின்றார். இந்த நாட்டில் கல்வியமைச்சராக இருந்த சி.டபிள்யு கண்னங்கர அவர்கள் 54 மகா வித்தியாலயத்தையே ஆரம்பித்து வைத்தார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்ச அவர்கள் 1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம், மஹிந்தோய 500 பாடசாலைகள், தற்பொழுது நகரங்களில் உள்ள பிரபல்ய பாடசாலைகளைப் போன்று ஒவ்வொரு கிராமததிலும் அதி நவீன பாடசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன, பாடசாலைகளில் தொழில் நுட்பம், கணனித் தொழில்நுட்பம் (ஜ.ரீ) கோமகம மஹிந்த ராஜபக்ச பாடசாலை இந்த அரசின் ஆட்சியில் கல்வியமைச்சின் காலத்தில் 365 பாடசாலைகளில் க.பொ. சாதாரண தரம், உயர்தரம் கற்பிப்பதற்கு தரத்திற்கு பாடசாலைகள் உயர்த்தரப்பட்;டுள்ளது. 250 பாடாசலைகளில் க.பொ.த.சாதாரண தரம் கற்பிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 பாடசாலைகள் புதிதாக தோண்றியுள்ளது.
இந்த ஒளிம்பியாட் போட்டியில் கடந்த வருடம் பதுளை மாகாவித்தியாலய மாணவர் ஒருவர் கணித விஞ்ஞானத்தில் சர்வதேச பாடாசலைகளின் போட்டிகளுக்குச் சென்று சர்வதேச விருதை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தமை, விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச விருதுகளை பெற்றுக் கொடுத்தமை, அண்மையில் ஆக்கத்திறமையில் 2 மாணவன் சர்வதேச கீர்த்தியை வென்றமை போன்ற முன்னேற்றங்கள் தம் கண்முன்னால் காட்சியளிக்கும்போது எதிர்கட்சித் தலைவர் கண்ணை முடிக்கொண்டுதான் இவ்வாறான பிழையான தகவல்களை சொல்லிவருவதை நான் வண்மையாகக் கண்டிப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
.jpg)



0 comments :
Post a Comment