பைஷல் இஸ்மாயில் -
அம்பாறை மாவட்ட பிரஜைகள் சமூக அமைப்பு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று (21)அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் தலைவர் அன்வர் நௌசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட அம்பாரை மாவட்ட பிரதேசங்களின் இராணுவ அதிகாரிகள், தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவபீட பீடாதிபதி கலாநிதி குணபாலன், ஓய்பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எம்.வாஹிட் மற்றும் சமயத் தலைவர்கள் ஆகியோருடன் பிரஜைகள் அமைப்பின் அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment