சுவாமி விபுலாநந்த அடிகளின் 67வது நினைவுதினம்- 2014

டினேஸ் செங்கலடி-

சுவாமி விபுலாநந்த அடிகளின் நினைவு தினம் ஜூலை 19 ஆகும். அந் நினைவு  தினத்தை மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கை நிறுவகம்  கிழக்குப் பல்கலைக்கழகம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 2.30 மணி  தொடக்கம் பி.ப 07.20 வரையும் 19ம் திகதி சனிக்கிழமை மு.ப 09.00 தொடக்கம்  பி.ப 01.25 வரையும் மிகவும் பிரமாண்டமான முறையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந் நினைவு தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு கல்லடி சுவாமி  விபுலாநந்த அழகியற் கற்கை நிறுவக இராஜதுரை அரங்கில் சுவாமி  விபுலாநந்த அடிகளின் ஆய்வு அரங்கமும். ஆவனத்திரைப்படங்களும் மற்றும் கலை  நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந் நிகழ்வுகள் யாவும் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக  பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார் தலைமையில் இடம் பெறுவதுடன், இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர்  கலாநிதி.கிட்ணன் கோவிந்தராஜா அவர்கள் கலந்துகொள்ளும் அதேவேளை  சிறப்பு விருந்தினராக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள்  நிறுவக சிரேஷ்ட உதவிப்பதிவாளர் திரு. யு.து.கிறிஷ்டி அவர்களும்.கௌரவ  விருந்தினராக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பிரதிப் 
பதிவாளர் து.விஜயகுமார்; அவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :