அமைச்சரின் ஊடகப்பிரிவு-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியுருப்பு பிரதேசத்திற்கு இது வரை 6000 வீடுகள் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் இந்த அளவு வீடுகளை வழங்க தன்னால் அங்கிகாரம் வழங்க முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
புதுக்குடியுருப்பு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்தது வருமாறு
புதுக்குடியுருப்புக்கு 6000 வீடுகள் வழங்கப்பட்டதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவான வீடுகள் ஒதுக்கப்பட்ட பிரதேசமாக புதுக்குடியுருப்பு திகழ்கின்றது. எதிர்வரும் காலங்களில் கிடைக்கபெறுக்கின்ற வீடுகளைப் பொறுத்து இங்கு வீடற்றோர் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக் காட்டினார்.
இக்கூட்டத்தில் வீதி அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு விடுத்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், மின்சாரம் கிடைக்காத பகுதிகளை கிராம சேவகர் ஊடாக வரைபடத்தை தயாரித்து ஒருவாராகாலத்திற்குள் அத்தரவுகளை அனுப்பிவைக்குமாறு பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார்.
விளாசிக்குளத்தை புணரமைப்பு செய்வதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாத இ.போ.ச பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இக்கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment