.jpg)
ஆயுத கலாச்சாத்தை அழித்துவிட்டதாக கூறிக்கொள்ளும் இவ் அரசுக்கு இன உணர்வுகளைத்தூண்டி மத வெறியாட்டம் நடத்தும் உணர்வுள்ளவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவது வேதனைக்குரிய விடயமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்
சட்டத்தரணி ஏ.சி.எம்.இப்றாகீம் எழுதிய சீனாவுக்கான அமைதி வழி அபிவித்தியும் அதன் இரகசியமும் எனும் நூல் வெளியீட்டு விழா கிண்ணியா பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவறு தெரிவித்தார்
மேலும் அவர் கூறுகையில் சீனாவில் சுமார் 56 க்கும் மேற்பட்ட இனங்கள் வாழ்கிறார்கள் 4 க்கு மேற்பட்ட மதங்கள் உள்ளன அந்த நாடு இன்று ஏனைய நாடுகளுக்கு பொருளாதார உதவிகளையும் தொழினுட்ப உதவிகளையும் வழங்கி வருகின்றது என்றால் ஒன்றினைந்த மக்களின் முயற்சியாகும்
இன்று எமது நாட்டில் யுத்தம் ஓய்ந்தாலும் உளவியல்ரீதியான மனநிலை மாற்றம் ஏற்படவில்லை அதனால்தான் இன்றும் மதரீதியான வெறியாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது
ஓட்டுமொத்த சமூகமும் அழிக்கப்பட்ட ஜப்பானின் ஹீரோசீமா நாகசாயி மக்களால் மீள முடீயுமாக இருந்தால் ஏன் வடக்கு மக்களால் இன்னும் மீள முடியவில்லை திட்டமிட்ட இனக்குரோதத்தின் அபிவிருத்தி சிறைப்படுத்தப்பட்டதுதான் காரணமாகும்
இந்த குரோத மனப்பாங்கு மாறாதவரை நாட்டில் அபிவிருத்தியோ இனங்களுக்கிடையில் ஒற்றுமையோ ஏற்படாது மக்களைப்பாதுகாக்க வேண்டியவர்கள் படலையை திறந்துவிட்டால் யாரை யார் பாதுகாப்பது என்ற அவல நிலை தொடர்ந்தும் தலைதூக்கி தாண்டவமாடும் பெறும்பாண்மை இன மக்களின் மன உணர்வுகள் மாற்றாதவரை இந்த நாட்டின் அபிவிருத்தி ஏமாற்றமாகவே அமையும் அந்த அடிப்படையில் சீனாவுக்கான அமைதி வழி அபிவித்தியும் அதன் இரகசியமும் என்ற நூலாசிரியரின் அனுபவம் இன்று நூலுருவில் எமக்கு கிடைத்திருப்பது எமக்கு மடடுமல்ல எமது சந்ததியனருக்கும் அவசியமமான ஒன்றாகும் என கூறினார்
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் கிண்ணியா வலயக்கல்வி பணிப்பபளர் சேகு அலி சிரேஸ்ட சட்டத்தரணி அப்துல் ஸத்தார் உட்பட பலர் கலந்துகொண்டனர்
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment