கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை

செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் இனரீதியான முரண்பாட்டை உண்டு பண்ணியமை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்படவேண்டும் என்று அமைச்சர் கோரியுள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் அவரை சார்ந்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அமைச்சர் கேட்டுள்ளார். அளுத்கம சம்பவங்கள் அரசாங்கத்துக்கு அவப்பேற்றை கொண்டு வருவதற்காக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டவையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அளுத்கமவில் தாக்குதல் நடத்தியவர்கள் பிரதேசத்தில் உள்ளவர்கள் அல்ல. அவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :