பாகிஸ்தான் பிரஜைகள் இலங்கைக்குள் நுழைவதற்காக விமான நிலையத்தில் பெற்றுவந்த உடனடி வீசா (on-arrival visa) நடைமுறையை இலங்கை அரசு இரத்துசெய்துள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரியான தஸ்னீம் அஸ்லம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் அரசியல் தஞ்சம் பெற்றுவரும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற பின்னணியிலேயே இந்த வீசா நடைமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிய பிரஜைகளுக்கான விமான நிலைய வீசா நடைமுறை இரத்து செய்யப்படுகின்றமை தொடர்பில் இலங்கை அரசு தமக்கு அறிவித்துள்ள போதிலும், இந்த முடிவை எடுப்பது பற்றி தம்முடன் ஏற்கனவே கலந்துரையாடப்படவில்லை என்று தஸ்னீம் அஸ்லம் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பில் பதிவு செய்யப்பட்ட பாகிஸ்தானியர்கள் சுமார் 1,500 பேர் இலங்கை குடிவரவுத்துறை மற்றும் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மைய நாட்களில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 comments :
Post a Comment