பொத்துவில் அறுகம்பை களப்பு பாலத்தின் கீழ் சடலம்



பொத்துவில் களப்புக்கட்டு பி-15 சேர்ந்த கலந்தர் அஸ்மின் (வயது 24) என்ற மனநோயயையுடைய இளைஞரின் சடலமே மீட்கப்பட்டது.

இந்த சடலம் பற்றிய தகவல் அருகிலுள்ள அறுகம்பை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியதை அடுத்து பொத்துவில் பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து, மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன் சடலம் மீட்கப்பட்டது

இச்சடலம் பற்றிய விசாராணையின் போது, இளைஞனின் தந்தையான கலந்தர் தனது சாட்சியத்தில், தனது மகனான அஸ்மின் ஒரு மனநோயாளி என்றும், நேற்று மாலையிலிருந்து வீட்டில் காணாமல் போயிருந்தார் என்றும் இன்று காலை அவர் சடலமாக அறுகம்பை பாலத்தின் கீழ் மிதப்பதாகவும் அறிந்தேன் என குறிப்பிட்டார்.

மரண விசாரணை செய்த நீதிபதி சடலத்தை பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்தபின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :