ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அக்கறையுடன் ஒத்துழைப்பு வழங்கும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

க்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அக்கறையுடன் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இலங்கை விஜயம் செய்துள்ள ஐ.நா. அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

யுனிசெப், யூ.என்.டி.பி., யுனிடோ போன்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுவதானது இதற்கு சிறந்த உதாரணங்களாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் பீரிஸ், ஜ.நா. பிரதிநிதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார பிரதி செயலாளர் நாயகம் ஒஸ்கருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

சர்வதேச விசாரணைக்கு அனுமதிப் பதில்லையென்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு பாராளுமன்றம் பெரும்பான்மையான ஒப்புதலை வழங்கியிருக்கின்றபோதும், சர்வதேச அழுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தே அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த சர்வதேச அழுத்தமானது நேரத்தையும், சக்தியையும் வளத்தையும் வீணடிக்கும் ஒரு விடயம். சர்வதேசத்திலுள்ள சிறியதொரு தரப்பினால் மாத்திரமே இவ்வாறான அழுத்தங்கள் வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :