த.நவோஜ்-
மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியான வாகனேரிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னல பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து கொழும்பை நோக்கிப் போய்க் கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் வாகனேரிப் பகுதியில் வைத்து மோதியதில் காரின் சாரதியும், காரில் பயணித்த ஒருவமான இரண்டு பேர் காயமடைந்த நிலையில் பொலனறுவை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment