வீட்டிற்கு வருகைதரும் வகனங்களை பொலிஸாரால் சோதனை செய்கிறார்கள் -ஆசாத் சாலி

னது வீட்டிற்கு வருகைதரும் அனைத்து வாகனங்களும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலையில் இருந்து துப்பாக்கி ஏந்திய இரண்டு பொலிஸார் எனது வீட்டிற்கு அருகில் இருந்தவண்ணம், வீட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுகின்றனர். வாகனங்களை நிறுத்தி, வாகனங்களின் இலக்கங்களை பெற்றுக்கொண்டு, தேசிய அடையாள அட்டையை சோதனையிட்டு, அசாத் சாலி வீட்டிற்கு எதற்காக வருகின்றீர்கள்? என்ன விடயம் என கேட்கின்றனர்.

இதற்காகத் தான் பொலிஸார் இருக்கின்றனர். கொலை செய்பவர்களை பிடிப்பதற்கு முடியாது. அளுத்கம, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய நகரங்களை சேதப்படுத்தியவர்களை பிடிப்பதற்கு முடியாது.

நாட்டில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, அனைவரும் அமைதியுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கும் எம்மிடமே வருகின்றனர். பொலிஸார் எவ்வாறான செயலை செய்கின்றனர் எனப் பாருங்கள் என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :