சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்

ண்மையில் அளுத்கம, தர்க்காநகர், பேருவலை போன்ற முஸ்லிம் பகுதிகளில் நடத்தப்பட்ட அட்டூளியங்களையும் அநீதிகளையும் எதிர்த்து அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் ஒரு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தை மிகவும் அமைதியான முறையில் நடாத்தியது அப்போது அச்சங்கத்தின் சிரேஷ;ட பிரதித்தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக சில பேரினவாத தீவிர சக்திகள் இனவாத்தைக் கக்கி அப்பாவி மக்களை குழப்பங்களுக்குள்ளாக்கி அவர்களின் வீடுகளையும் வியாபார நிலையங்களையும் உடமைகளையும் உயிர்களையும் சூரையாடி தீயிட்டுக் கொழுத்திய அந்த தீய சக்திகளை சட்டத்தின் முன் உடனடியாக நிலை நிறுத்தி அநீதி இழைக்கப்பட்ட அம்மக்களுக்கு நீதியும் நியாயமும் நிவாரணமும் உடன் வழங்கப்பட வேண்டும் என்ற கோசத்தை முன்நிறுத்தி இந்த கண்டனப் பேரனி இடம்பெற்றதாக குறிப்பிட்டார். 

இதில் கொழும்பு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிங்களப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு அவர்களும் தங்களின் முழுமையான ஆதரவை வழங்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :