அன்சார்-
நாட்டின் சமாதானத்திற்கு குந்தகம் விளைபிப்பதாகக் கூறி மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத்சாலி அவர்களுக்கு நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளதாக அறிய முடிகிறது.
இந்த தடை உத்தரவினால் அசாத்சாலி கூட்டங்களில் பேச முடியாதென்றும், துண்டுப்பிரசுரங்கள் எதனையும் வெளியிட முடியாதென்றும் சொல்லப்படுகின்றது.
நாட்டைக் குழப்பி, மக்களை அச்சத்திற்கு ஆழாக்கி, இனவாத விஷக்கருத்துக்களை துப்பிக் கொண்டு, மக்கள் மத்தியில் இனக் குரோதத்தை வளர்த்து, முஸ்லிம்களின் உடமைகளுக்கும் பங்கம் ஏற்படுத்தி இந்த நாட்டையே நாசமாக்கி கொண்டிருக்கும் பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கும் அவரது வாய்க்கும் இன்னும் தடை உத்தரவு போடாது அசாத்சாலி அவர்களுக்கு தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
என்னவொரு வேடிக்கை...!!! என்னவொரு ஆச்சரியம்...!!!
சபாஷ் நீதிமன்றம் என்றால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ஆணைக்குழு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
யாருடைய வாய்க்கு பூட்டுப் போடனுமோ அவனுடைய வாக்குப் பூட்டுப் போடாமல் அகல விரித்து விட்டு மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வாய்க்கு பூட்டுப் போட்டிருக்கிறார்கள்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரிலிருந்து மக்கள் சுதந்திரமாக இந்த நாட்டில் வாழ்ந்து வந்தார்கள், எப்பொது பொதுபலசேனா என்ற பயங்கரவாத அமைப்பு உதயமானதோ அப்போதிலிருந்தே இந்த நாட்டில் பயங்கரவாதமும் இனவன்முறை என்ற ரீதியில் உதயமாகிவிட்டது.
இவர்களது செயற்பாடுகள் அனைத்தும் அதி தீவிரவாதமாகவே காணப்படுகின்றது இதற்கு மிகத் தெளிவான சான்று அண்மைய அளுத்கமை, பேருவளை இன வன்முறைச் சம்பவங்கள்தான்.
இவ்வாறான பயங்கரவாத அமைப்புக்கும் அதன் சூத்திரதாரிகளுக்கும் தடைஉத்தரவு பிறப்பித்து அவர்களது வாய்க்குப் பூட்டுப் போடுவதை விட்டு விட்டு மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒருவருக்கு தடைஉத்தரவு பிறப்பித்தது உண்மையில் கண்டிக்கத் தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment