தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்தசேஷனம் செய்யப்பட்டது- வட்டரக்க விஜித தேரர்

லங்கையில் கடந்த வாரம் தாக்கப்பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்குதலின் போது தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்தசேஷனம் செய்யப்பட்டாத கூறினார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

மிதவாத பௌத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளராக வட்டரக்க விஜித தேரர் செயற்படுகிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வட்டரக்க விஜித தேர்ரை சந்தித்து திரும்பிய அவரது சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ இந்தத் தகவலை கூறியுள்ளார். 

ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள். அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்டரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் கிடக்கக் காணப்பட்டார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக்கியதாகக் கூறியதாக அவரது சட்டத்தரணி முன்னதாக கூறியிருந்தார். தனது தாக்குதல் தொடர்பில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப்பையே குற்றஞ்சாட்டுவதாக சட்டத்தரணி கூறியுள்ளார். 
பிபிசி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :