அனர்த்தம் தணித்தலும் தயார்படுத்தலும் சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு


ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-

னர்த்தம் தணித்தலும் தயார்படுத்தலும் சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் குழுநிலை ஆய்வும் நிகழ்வொன்று அக்கரைப்பற்று அர்-ரஹீமியா வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் அல்-ஹாஜ் ஏ.எல்.செயினுதீன் தலைமையில் நேற்று முன்தினம் (28.06.2014) சனிக்கிழமை நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் ஹபிடாட் -  UNHABITAT  நிறுவனத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்ட இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கும் குழுநிலை ஆய்வும் அக்கரைப்பற்று அர்-ரஹீமியா வித்தியாலயத்தின் அனர்த்த பாதுகாப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை உதவித் தவிசாளர் ஐ.எல்.ஹக்கீம், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.அஸ்ஹர், பட்டியடிப்பட்டி ஜும்ஆபள்ளிவாயல் தலைவர் எம்.ஏ.அப்துல் மஜீத் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அனர்த்த பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிபர் அல்-ஹாஜ் ஏ.எல்.செயினுதீன், பிரதி அதிபர் எம்.ஐ.எம்.ஹிலால், என்.ரி.அஹ்ஸன் ஆசிரியர் முதலியோர் அனர்த்தம் தணித்தலும் தயார்படுத்தலும், அனர்த்தங்களை அடையாளம் காணுதல், அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்தலும் அதனை; வெற்றி கொள்ளலும் முதலிய தலைப்புக்களில் பயிற்சிகளை வழங்கியதோடு, குழு நிலைப் பயிற்சிகளையும் வழங்கினார்கள்,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :