பாணந்துறை நோலிமிட் மீதான நாசகார நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் -உதுமாலெப்பை

ஏ.எல்.ஜனூவர்-

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்து, அடக்கி, ஒடுக்க முனைத்துள்ள கடும்போக்காளர்களின் மற்றுமொரு அழிச்சாட்சிய நடவடிக்கையே பாணந்துறை நோலிமிட் மீதான தாக்குதலாகும். இந்நாசகார நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டுமென்கிறார் கிழக்கு மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை

பாணந்துறை நோலிமிட் ஆடையகத்தின் அழிப்பு நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்;.
இது குறித்து அவர் மேலுத் குறிப்பிடுகையில்,

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் என்றுமில்லாத அளவு சோதனையை கடும்போக்கு மதவாதிகளினால் எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர். இனவாதத்தைக் கக்குகின்றவர்களினால் அப்பாவி சிங்கள மக்கள் உசுப்பேற்றப்படுகின்றனர்.

அளுத்கம சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கைளக் குறிவைத்து சில சம்பவங்கள் தினமும் தொடர்ச்சியாக அங்கங்கே இடம்பெற்று வருகின்றன. இராணுவத்தின் தொடர்சியான கண்காணிப்பின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் எம்,ஓ. வீதியிலுள்ள கமால் பள்ளிவாசலும் கடந்த சனி அதிகாலை தாக்கப்பட்டு;ள்ளது. இவ்வாறான தொடர் தாக்குதலின் மற்றுமொரு இனவெறியாட்;டம் பாணந்துறை நோலிமிட் ஆடையகத்தையும் எரியூட்டியுள்ளது.

ஆண்டாண்டு காலம் சமூக ஒருமைப்பாட்டுடன் வாழும் முஸ்லிம்களை பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிரிகளாக கடந்த இரு வருடங்களாக காட்டி வரும் பொது பல சேனாவும் அதன் அடிவருடிகளும் தற்போது முஸ்லிம்களின் முதுகெலுப்பாகவுள்ள பொருளாதாரத்தை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பினரும் பெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
முஸ்லிம்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும். முஸ்லிம்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் உடன் மேற்கொள்ள வேண்டுமென்று கோருகின்றோம்.

இந்நிலையில், பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் பெறுப்பற்ற வகையில் அப்பாவி சிங்கள மக்களை இனவாதத்தின் பால் ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நாட்டில்; சிங்கள மக்களுக்கு எதிரான மிகப் பெரிய கிளர்ச்சி விரைவில் உருவாக்கப்படவுள்ளது. ஜிஹாத் தீவிரவாதத்திற்கு எதிராகப் போராட சிங்களவர்கள் தயாராகவுள்ளனர். நாட்டில் தமிழ் தீவிரவாதிகள் நல்லதொரு பாடத்தினைக் கற்றுக்கொண்டுள்ளனா.; முஸ்லிம்களுக்கும் பாடம் கற்பிப்பதற்கு சிங்கள மக்கள் தயாராகவே உள்ளனர் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க இனவாதத் தீக்குழம்பை வார்த்தைகளால் ஊடகவியலாளர்கள் மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை கக்கியுள்ளார்.இதனால் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் வேதனைப்பட்டவர்களாகவுள்ளனர்.

கடும்போக்கு மதவாதிகளினால் இந்நாட்டில் வாழும் சமூகங்கள் அச்சப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சூழலில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர் இவ்வாறு இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு இருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. இத்தகைய கருத்துக்கள் கண்டிக்கத்தக்கதாகும்.
பொது பல சேனாவும் சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களும் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை அழிக்க வேண்டும் என்று இணைந்து செயற்படுகிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது.

இந்த நாட்டில் அமைதி நிலவக் கூடாது என்று விரும்பும் பொது பல சேன போன்ற கடும்போக்கு மதவாதிகளின் செயற்பாடுகளை அங்கீகரிக்கும் அளவுக்கு ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் துணிந்து, அநாகரியமான முறையில் சிறுபான்மை மக்களை அச்சமூட்டும் வகையில் பேசியிருப்பது; இந்ந நாட்டை மீண்டும் சுடுகாடாக மாற்றுவதற்கான முயற்சியாக பார்க்க வேண்டியுள்ளது

இத்தகையவர்கள் தொடர்பில் அரசாங்கம் இனியும் மௌனம் காக்கக் கூடாது. பொறுப்பு வாய்ந்த அமைச்சரல்ல எக்கட்சித் தலைவரோ அல்லது வேறு அமைச்சர்களோ இனவாதம் பேசினாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையினை ஜனாதிபதி எடுக்க வேண்டும். இனவாதப் பேச்சுகளைப் பேசி இனமுரண்பாடுகளைத்தோற்றுவிப்பதைத் தடுப்பதற்கான விஷேட சட்டமொன்று உருவாக்கப்பட்டு அந்தச் சட்டத்தின் கீழ் இத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டுக்காக முஸ்லிகள் அன்று முதல் இன்று வரை இரத்தமும் வியர்வையும் சிந்தியிருக்கிறார்கள். அன்று வாழ்ந்த சிங்கள அரச தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் ஒன்றுபட்டு செயற்பட்டிருக்கிறார்கள் என்ற வரலாறுகளை மறந்து முஸ்லிம்கள் சிங்களவர்களின் ஜென்ம விரோதிகள் போன்று இத்தகைய கடும்போக்காளர்கள் செயற்படுவது இந்நாட்டின் எதிர்காலத்தை ஆரோக்கியமற்றதாக ஆக்கிவிடும்.

இந்நிலையில், முஸ்லிம்களும் இந்நாட்டுப் பிரiஐகள் என்ற வகையில் அவர்களோடு ஒற்றுமையாக இருந்தார் என்பதற்காக மஹியங்கனை பிரதேச உறுப்பினர் வட்டரக்க தேரரை அநியாயமாக தாக்கியுள்ளனர். அவர் புத்தபெருமானின் போதனைகளைப் போதிக்கும் ஒரு மதகுரு என்றும் பாராமல் அவரை மிகக் கேவலமான முறையில் தாக்கி அசிங்கப்படுத்தியுள்ளார்கள். இருப்பினும் இத்தகைய ஈனச் செயலைப் புரிந்தவர்கள் கூட இதுவரை கைது செய்யப்படு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை எனபது வேதனைக்குரிய விடயமாகும்.

30 வருட கொடூர யுத்தத்தின் பின்னர் இந்நாட்டில் நிலவும் அமைதி தொடர்ந்து நிலைக்க வேண்டுமாயின,; கடும்போக்காளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இதனை இந்த அரசாங்கமும் சமாதானத்தையும் சகவாழ்வையும் விரும்புபவர்கள் அனைவரும் ஒன்றினைந்து மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்நாட்டில் இனமுரண்பாடுகள் தலைதூக்கமல் தடுக்க முடியும்.

வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்களின் பொருளாதாரத்தைச் சூரையாடுபவர்களும் கடும்போக்கு மதவாதிகளும் நாட்டை அழிவுக்குச் இட்டுச்செல்வதிலிருந்து இந்நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பை பாதுகாப்புத் தரப்பினர் எவ்வித பாகுபாடுகளுமின்றி மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக அமைச்சர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :