வாகன வியாபாரத்துடன் தொடர்புடைய ஹிங்குரங்கொட பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹாணை பிரதேச விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் இன்று (23) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கல்கிஸை, கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் வாகனங்களை வாடகைக்கு பெற்று, போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸ் மாஅதிபருக்கு 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடுவாவெல பிரதேசத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து மோட்டார் வண்டி ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் நேற்று (22) இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டார். இந்நபரிடமிருந்து கைக் குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது இந்த வியாபாரத்திற்கும் ஹிங்குரங்கொட பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் பிரதேசசபை உறுப்பினர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த பிரதேசசபை உறுப்பினரது பொறுப்பிலிருந்து 18 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

0 comments :
Post a Comment