கசினோ சூதாட்டத்துக்கு புதிதாக எந்த அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்திருப்பதாகக் கூறிய அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் ஐந்து அனுமதிப்பத்திரங்களுக்குரியவர்கள் ஹோட்டல் நிர்வாகங்களுடன் பங்காளராக செயற்பட முடியும் எனவும் தெரிவித்தார்.
எனினும் எக்காரணம் கொண்டும் அந்த அனுமதிப்பத்திரங்களை யாருக்கும் விற்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜேம்ஸ்பக்னர் இன்று பெரும் பூதமாகக் காட்டப்படுகின்றார். அவர் மட்டும் தான் கசினோ சூதாட்டத்தை உலகளவில் மேற்கொள்வதான மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
உலகில் எங்கோ ஓரிடத்தில் பக்னர் முட்டிமோதிக்கொண்டால் அதற்கும் கேள்வி எம்மிடம் கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இதுவொரு புதுமையான விடயமாகும்.
மோதல் நடத்த நாட்டில் பொலிஸார் இல்லையா? அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.இலங்கையில் நடந்தால் எமது பொலிஸார் விசாரிப்பார்கள்.
இதில் அரசியல்வாதிகளான நாம் ஏன் தலையிடவேண்டும். ஊடக அமைச்சரான எனக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்நிலையில் இங்கு ஏன் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல கேட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment