வ
ட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை பதிவியிழக்கச் செய்ய சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆளுனர் இராணுவ அதிகாரி எனக் கூறி, அவரது நியமனத்திற்கு சிலர் எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாக இங்கு கருத்து வௌியிட்ட வைத்தியர் வசந்த பண்டார தெரிவித்தார்.
மேலும் அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளதால், அந்த இடத்திற்கு பிரிதொருவரை நியமிக்க சிலரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment