இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் சுலைமான் ஷாபி மாலைதீவு பயணமானார்

இன்று (11.05.2014) மாலைதீவில் " அமீர் அகமட் மாகு " நகரத்தில் ஆரம்பமாகும் சார்க் இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நிந்தவூர் நெஸ்கோ இளைஞர் கழகத்தின் தலைவரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான சுலைமான் ஷாபி சற்று முன்னர் மாலைதீவு நோக்கி பயணமானார்.

இம் மகாநாட்டில் சார்க் நாடுகளை உள்ளடக்கிய நாடுகளின் இளைஞர், யுவதிகள் தற்போது எதிர் நோக்கும் முக்கிய சவால்கலான கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்புக்கள், ஆண் , பெண் சமத்துவம், சூழல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஐந்து விடயங்களில் கலந்துரையாடவுள்ளனர்

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சார்க் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் திருமதி. R.D. ராஜபக்சா இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. நிலாந்தி சுகததாச , மற்றும் இளைஞர் பாராளுமன்ற செனட் உறுப்பினர் துலாஞ்சலி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் இம் மகாநாடானது எதிர்வரும் 15ம் திகதி நிறைவுபெறவுள்ளது. இதேவேளை பாராளுமன்ற அமைச்சர் சுலைமான் ஷாபி நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :