கல்முனை அபிவிருத்திக் குழுத்தலைவரும் திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியால் கல்முனை சாகிப் வீதி காபட் வீதியாக செப்பனிடும் வேலைக்கு ஜனாதிபதியின் நேரடி பணிப்பில் 4.5கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்து வேலைகள் ஆரம்பித்து மந்த கதியில் இருந்தன.
இது சம்மந்தமாக விசாரித்த போது கடந்த வருடம் பாதை வேலைக்கான பொருட்களின் விலைகளை விட இவ்வருடம் பெரும் விலை வித்தியாசம் இருந்ததால் வேலைகள் செய்வதில் ஒப்பந்த நிறுவனத்திற்கு சிக்கல் இருப்பதாக தெரிவித்ததனைத் தொடர்ந்து ஹரீஸ் எம்பி வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பிரேம ஸ்ரீ இடம் இவ்விடையம் தொடர்பாக எடுக்கூறியதன் பின்னர் உடனடியாக இவ்வீதியை புதிய விலையின் பொருட்கொள்வனவுடன் ஒரு வாரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதன் காரணமாக இன்று வேலை ஆரம்பமானது.
இது சம்மந்தமாக கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸிடன் இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது:
சம்மந்தப்பட்ட வீதி தன்னால் 4.5 கோடி பெறுமதியில் ஜனாதிபதியின் உதவியுடன் கொண்டுவந்ததாகவும் இதனை செய்து முடிப்பதில் ஒப்பந்த நிறுவனத்திற்கு பொருட்களின் விலைப்பிரச்சனையால் தாமதமானதாகவும் மீண்டும் அதனை சரிசெய்ய சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி ஒருவாரத்திற்குள் குறிப்பிட்ட சாஹிபு வீதியை செய்து முடிக்க சம்மந்தப்பட்டவர்கள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இன்று வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க வேறு சிலர் இதற்க்குள் தேவையில்லாது வந்து மூக்கை நுளைத்து அரசியல் செய்யவருவது வேதனையளிக்கிறது என்று இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்குத்தெரிவித்தார்.





0 comments :
Post a Comment