வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள், குழு மட்டக்களப்பு விஜயம்-படங்கள்



பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கை அரசாங்கத்தினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குழு 10-05-2014 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட செயலகத்துக்கு வருகைதந்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குழுவை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து மட்டு அரச அதிபரின் காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தூதுக்குழுவினருக்கு மாவட்ட அரச அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை ,மீள்குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில் சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான் ,பிலிப்பைன்ஸ், போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குழுவே இவ் விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :