ஸ்ருதிஹாசனின் இரகசிய காதல் அம்பலமானது. திரையுலகில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.
அதேவேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. டி டே என்ற படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இது தெரிந்ததும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தனியாக வீட்டில் இருந்த ஸ்ருதியை சில மாதங்களுக்கு முன் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து தாக்க முயன்ற சம்பவமும் நடந்தது. முன்னதாக நடிகர் சித்தார்த்துடன் அவர் நெருக்கமாக பழகுவதாக இணைய தளங்களில் பரபரப்பாக தகவல் வெளியானது.
பின்னர் அந்த கிசுகிசு நமத்துப்போனது. இந்தநிலையில் நாகார்ஜூன் மகனும், டோலிவுட் நடிகருமான நாக சைதன்யாவை ஸ்ருதி ரகசியமாக காதலித்து வந்தார் என்று திரையுலகில் பேசப்பட்டது.
தங்களின் உறவுபற்றி வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர்.
இந்நிலையில் இந்த ஜோடி திடீரென்று பிரிந்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பிரிவை இருவருமே அமைதியாக பேசி ஏற்றுக் கொண்டார்களாம். இவர்களின் காதல் விவகாரம் இப்போதுதான் அம்பலமாகியுள்ளது.

0 comments :
Post a Comment