த.நவோஜ்-
மஹிந்த சிந்தனை நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகளில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் பிரதேச செயலக மட்டத்தில் சமூக சீர்திருத்த குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சிறைச்சாலைகளில் ஏற்படும் நெருக்கடிகள், செலவினங்கள் மற்றும் குற்றவாளிகளைக் குறைக்கும் நோக்குடன் இந்த சமூக சீர்திருத்தக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சமூக சீர்திருத்த குழு அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.தட்;சணகௌரி தினேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு நீதிமன்ற சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் சு.தயானந்தன், வாழைச்சேனை பிரதேச செயலக சமுதாயம்சார் அபிவிருத்தி உத்தியோகத்தர் த.சுதாராஜ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், சமூக சீர்திருத்த குழுக்களின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி சமுதாயம்சார் கூட்டிணைந்த பிரதேச மட்ட குழுவிற்கு குறித்த பிரதேசத்திற்கான பிரதேச செயலாளர் பதவி வகிப்பார் என்ற அறிவுறுத்துலுக்கமைவாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், சமூகசேவை உத்தியோகத்தர், மகளீர், சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர், சிறைச்சாலை உத்தியோகத்தர், திறன் தொடர்பான உத்தியோகத்தர், என பல்வேறு திணைக்களங்களிலும் கடமையாற்றும் சமூக வேலைத் திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளடங்களான குழு தெரிவு செய்யப்பட்டது.
இவர்கள் சமூதாயத்தில் குற்றத்துடன் தொடர்பானவர்களை நேர்வழிப்படுத்தி அவர்களை எவ்வாறு சமூகத்துடன் இணைப்பது சம்பந்தமாகவும், அவர்களுடன் குடும்பங்களின் தனிப்பட்ட திறமைகளை இனம் கண்டு அவர்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை வகுத்து பிரதேச ரீதியாக குற்றச் செயலை தடுப்பதும், இதனூடாக விழிப்புணர்வை மேற்கொள்வதன் ஊடாகவும் சிறந்த சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப முடியும் என்ற நோக்கில் செயற்படுவதே இவர்களது கடமையாகும் என்று மட்டக்களப்பு நீதிமன்ற சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகஸ்த்தர் சு.தயானந்தன் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment