றியாஸ் ஆதம்-
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2014 ஆண்டிற்கான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம் மன்சூர் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும்;, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர், கௌரவ அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ அன்சீல் விசேட அதிதியாகவும், அதிதிகளாக கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என். மதிவண்ணன் மற்றும் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச் விமலசேன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment