இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி ,கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டார்.
மேலும் சிறப்பு அதிதிகளாக நகர சபையின் பிரதி தவிசாளர் நகர சபை உறுப்பினர்கள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜனாப் முகைதீன் பாவா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்ட இப்பரிசளிப்பு வைபவத்தில் பரிசில்களை வழங்கி வைத்தனர் .
அமைச்சர் உரையாற்றுகையில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த காலத்திலும் அரசாங்கத்துக்கு துரோகம் செய்யப்போவதில்லை எனவும் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற நோக்கம் அந்த கட்சிக்கு கிடையாது என்றும் மாகாண அமைச்சர் ஹாபிஸ் தெரிவித்தார்.
அதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணம் அரசாயங்கத்துக்கு கிடையாது என்றும் அவ்விடத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வுக்கு ஏறாவூர் நகரசபை உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி இந்த விழாவில் கலந்து கொண்டமை இப்பிரதேசத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பையும் பிரதேச அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் முன்வந்துள்ளமையையும் கண்ணுற்ற அமைச்சர் மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடு இந் நகர சபை உறுப்பினர்கள் பிரதேசத்தின் நன்மை கருதி எந்த ஒரு அபிவிருத்தி திட்டத்தினை செயற்படுத்த விரும்பினாலும் அதற்கு தான் பூரண ஒத்துழைப்பை வழங்க உள்ளாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் ஊடகப் பிரிவு
அதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணம் அரசாயங்கத்துக்கு கிடையாது என்றும் அவ்விடத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் குறிப்பிட்ட அவர் முஸ்லிம் காங்கிரஸினை தவறாக கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது எனவும் மக்கள் வெறுமனே முஸ்லிம் காங்கிரஸினை விமர்சிப்பதை விடுத்து அரசாங்கத்தினை பலப்படுத்துவதன் அவசியம் எழுந்துள்ளது என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு ஏறாவூர் நகரசபை உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி இந்த விழாவில் கலந்து கொண்டமை இப்பிரதேசத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பையும் பிரதேச அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் முன்வந்துள்ளமையையும் கண்ணுற்ற அமைச்சர் மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடு இந் நகர சபை உறுப்பினர்கள் பிரதேசத்தின் நன்மை கருதி எந்த ஒரு அபிவிருத்தி திட்டத்தினை செயற்படுத்த விரும்பினாலும் அதற்கு தான் பூரண ஒத்துழைப்பை வழங்க உள்ளாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் ஊடகப் பிரிவு

0 comments :
Post a Comment