கொழும்பில் பொது பல சேன நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பொது பலசேனா பற்றி நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருந்தார். 2012 க்குப் பின்னர்தான் இவர்களின் அட்டகாசம் அதிகரித்திருக்கின்றது. இதனை உரியவர்கள் தட்டிக்கேட்காமல் இருக்கின்றார்கள்.என்று பெயர் குறிப்பிடாமல் அரசாங்கத்திற்கு கை நீட்டி அது பற்றி நீதி அமைச்ரே கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
இந்த நாட்டில் உத்தியோக பற்றற்ற பொலிஸ் படையொன்றை நாம் வைத்திருக்கின்றோம் என்று பொது பல சேனாவுக்கு எப்படிப் பகிரங்கமாகப் பேச முடியும் என்று நீதி அமைச்சர் கொழும்பு புற நகர் பகுதியில் நடந்த கூட்டமொன்றில் பேசி இருந்தார். இதனால் பொதுபல சேன செயலாளர் கலபொட அத்த ஞானசரத்தேரர் கொதிப்படைந்திருக்கின்றார்.
இது பற்றி ஆளும் தரப்பு முக்கிஸ்த்தர் டலஸ் அழகப்பெரும 17-03-2014 நடத்திய பிரிதொரு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த நாட்டில் இனங்களிடையே மிகப் பெரிய வன்முறைகளை நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதிகள். அவர்களுடனே அமைச்சர் ரவூப் ஹக்கீம் விருந்துண்டு. அப்போது பிரபாகரனின் விருந்து பற்றியும் மெச்சிப்பேசி இருந்ததும் எங்களுக்கு நினைவிற்கு வருகின்றது. எனவே அந்த ஆக்கிரமிப்புக்காரர்களுக்கு எதிராக தனது குற்றப் பத்திரிகையில் ரவூப் ஹக்கீம் என்ன முறைப்பாட்டை முன்வைத்திருக்கின்றார் என்று கேட்கத் தோன்றுகின்றது. என்ற கேள்வியை எழுப்புகின்றார் அமைச்சர் டலஸ் அலகப் பெரும.
தேரரின் ஊடகவியலர் சந்திப்பில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பற்றியும் ஞானசாரத் தேரர் கேள்வி எழுப்பி இருந்தார். ஹக்கீமின் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியிலான வார்த்தைகள் தேர்தல் மேடைகளுக்கு மட்டும் மட்டுப்பட்டதா என்ற சந்தேகம் சமூகதத்திற்கு இருக்கின்றது.
ஞானம் ஒரு பக்கம் நீதி மறு பக்கம் நடக்கப்போவது என்ன? எது நடந்தாலும் சமூகம் மிக எச்சரிக்கையாக இருந்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும்.JM -

0 comments :
Post a Comment