முழங்கால் மூட்டு ஒன்றை ஒன்று சார்ந்துள்ள, பல பகுதிகளைக் கொண்டுள்ள ஒரு அமைப்பாகும். இது தொடை எலும்பு, கால் எலும்பு மற்றும் மூட்டிற்கு முன்னுள்ள சிறிய எலும்பு என 3 எலும்புகளின் கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பினால் தான் நம்மால் நடக்க, ஓட மேலே ஏற மற்றும் கீழே இறங்க முடிகிறது. இந்த எலும்புகளின் முனைப்பகுதியில் குறுத்தெலும்பு உள்ளது. சைனோவியல் என்னும் வழுவழுப்பான திரவமானது குறுத்தெலும்புகளுக்கு இடையில் சுரந்து வழவழப்பாக்குகிறது. இந்த திரவம் குறையும்போது குறுத்தெலும்புகள் ஒன்றோடொன்று உரசும்போது தேய்மானமடைகிறது. அதனால் முழங்கால் மூட்டில் தாங்கமுடியாத அளவிற்கு வலி ஏற்படுகிறது. நடப்பதற்கு சிரமமாகிறது.
ஆர்த்ரைட்டீஸ் வரக் காரணங்கள் :
முழங்கால் மூட்டில் ஆர்த்ரைட்டீஸ் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தேய்மானம் மற்றும் சிதைவடைந்த ஆர்த்ரைட்டீஸ் பொதுவாக ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் என்றழைக்கப்படுகிறது. இந்த ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. தேய்மானம் மற்றும் சிதைவானது நாள்பட்ட எலும்பு முறிவு, எலும்புகள் மூட்டோடு சரியாக பொருந்தாதிருத்தல், தசை நார் மற்றும் சவ்வுகளில் ஏற்பட்ட காயம் போன்ற காரணங்களால் ஏற்படலாம். ஏன்? எந்தவொரு காயமில்லாமலும் ஏற்படலாம். சில சமயங்களில் வளைந்த கால்கள் காரணமாக எலும்புகள் மூட்டில் சரியாக பொருந்தாததினாலும் ஆர்த்ரைட்டீஸ் உருவாக அதிக வாய்ப்பிருக்கிறது. அடுத்து பரவலாக காணப்படுவது ரொமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் ஆகும். இந்நோய் எலும்பை சுற்றி காணப்படும் மெல்லிய திசுக்களை பாதித்து வீக்கமடைய செய்கிறது. இதற்கும் மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும் முழங்கால் மூட்டில் ஏற்படும் எலும்பு முறிவு காரணமாக மூட்டுத்தேய்மானம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தேய்மானம் முற்றிய நிலையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது முழங்கால் மூட்டை மாற்றி அமைத்தலாகும். செயற்கை மூட்டானது 3 பாகங்களைக் கொண்டது. தொடை எலும்பின் கீழ்முனைப் பகுதியானது ஒரு உலோகத்தாலானது. கால் எலும்பின் மேல் முனைப்பகுதியானது ஒரு உலோகத்தாலானது. இந்த இரண்டு முனைப்பகுதிகளுக்குமிடையில் பாலி எதிலின் பகுதி உள்ளது. இது அதிர்வை உள்வாங்கும் பகுதியாக செயல்படுகிறது. சில சமயங்களில் மூட்டின் முன்பகுதி எலும்பும் மாற்றியமைக்கப்படலாம். மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் போது மூட்டு முழுவதையுமே மாற்றப்பட வேண்டியதில்லை. மூட்டின் எந்தப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தப் பகுதியை மட்டும் மாற்றி சீரமைத்தால் போதும். மூட்டு முழுவதுமே பாதிப்படைந்திருந்தால் மட்டுமே முழு மூட்டையுமே மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். புதிய செயற்கை மூட்டானது சாதாரணமான மூட்டைப் போன்றே எளிதில் அசைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே நாங்கள் புதிய வடிவமைப்பையும் நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டு உங்களுக்கு சரியாக பொருந்தும் வகையிலுள்ள செயற்கை மூட்டைத்தான் பொருத்துவோம்.
ஆக்ஸீனியம் செயற்கை மூட்டு :
தற்போது நவீன இறக்குமதி செய்யப்பட்ட ஆக்ஸீனியத்தினாலான செயற்கை மூட்டு பொருத்தப்படுகிறது. இது எப்டிஏ அங்கீகாரம் பெற்றது. இந்த செயற்கை மூட்டானது மற்ற செயற்கை மூட்டுகளை விட அதிக ஆயுட்காலமுடையது. இது அனைவரது உடலுக்கும் ஒத்துப்போகும் தன்மை கொண்டது.
எப்பொழுது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்?
உங்களுடைய அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அளவிற்கதிகமாக முழங்கால் மூட்டுவலி இருந்தால் அதாவது நடப்பதற்கு, மாடிப்படி ஏறுவதற்கு நாற்காலியில் அமருவதற்கு உட்கார மற்றும் எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டாலோ அல்லது பகல் மற்றும் இரவு நேரங்களில் ஓய்வெடுக்கும்போது கடுமையான மூட்டு வலி ஏற்படும்போது அல்லது உங்கள் மூட்டில் கடுமையான தொற்று காரணத்தால் அதிகமான வீக்கம் காணப்பட்டு எந்த மருந்து மற்றும் எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் சரியாகாமலிந்தாலோ, அதிக உடல் பருமன் காரணமாக உங்கள் மூட்டு அளவிற்கு அதிகமாக உள்பக்கமோ அல்லது வெளிப்பக்கமோ வளைந்திருந்தாலோ மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுவீர்கள். மனு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு மூட்டு திறனை மேம்படுத்தவதற்காகவும் தசையை உறுதிப்படுத்துவதற்காகவும் மறுபயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் உங்கள் நடக்கும் திறனை அதிகப்படுத்த பயிற்றுவிக்கப்படுவீர்கள். இது தவிர உங்கள் வீட்டில் எந்தெந்த உடற்பயிற்சி செய்யலாம் என்று பயிற்றுவிக்கப்படும். இதற்கென்றே பிரத்யேக உடற்பயிற்சிகூடம் உள்ளது. தொடர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள். அதன்பின் தொடர்ந்து நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள். நீங்கள் நோயாளிகளல்ல. உங்களுடைய காலில் மட்டும்தான் பிரச்னை. எனவே எந்தநேரமும் படுத்தே ஓய்வெடுக்காமல் நடந்து பயிற்சி செய்ய வேண்டும். 6 வாரங்களுக்குப்பிறகு நீங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடலாம். கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் கூட ஓட்டலாம்.

0 comments :
Post a Comment