மலேசிய விமானம் விழுந்துகிடக்கிறது. பயணிகள் பத்திரமாக உள்ளனர் எனும் வீடியோவால் பரபரப்பு



விபத்துக்கள், இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும்போது, அது தொடர்பிலான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கும்.

இணையத்தின் வழியாக உலகம் விரல் நுனிக்கு வந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், இந்த ஆர்வத்தையும் அக்கறையையும் தவறாகப்பயன்படுத்திக்கொள்வதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காணாமற் போயிருக்கும் மலேசிய விமானம் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு மணி நேரமும் வெவ்வேறு கோணங்களில் இணைய செய்தி இதழ்களில் வெளிவருகின்றன.

இதற்கு நடுவே, பீதி கிளப்பும் வதந்திகளும் பொய்த் தகவல்களும் பரப்பப்படுகின்றன.

'' பெர்முடா முக்கோணப் பகுதியில் மலேசிய விமானம் விழுந்துகிடக்கிறது. எனினும் பயணிகள் பத்திரமாக உள்ளனர். இந்த வீடியோவைப் பாருங்கள்'' என்ற பதிவை பேஸ்புக்கில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதன் பின்னணியில், வழக்கம்போல, 'மல்வேர்' எனப்படும் கணினிகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய மென்பொருள்களை உருவாக்கிப் பரப்பும் ஹெக்கர்களின் கைவரிசை உள்ளது.

அதுவும் இந்த வீடியோவை பிபிசி, சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறி அந்த வதந்தியின் 'நம்பகத் தன்மையைக்' கூட்ட ஹெக்கர்கள் முயல்கின்றனர்.

கூடவே, 'பிரேக்கிங் நியூஸ்', 'அதிர்ச்சி வீடியோ' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வலைவிரிக்கின்றனர்.

அந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்றால் முதலில் அதைப் பகிர வேண்டும் என்றொரு நிபந்தனைக் கட்டளையையும் ஹெக்கர்கள் விதிக்கின்றனர்.

ஆனாலும், இதை நம்பியோ அல்லது என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்க விரும்பியோ குறிப்பிட்ட வலைத்தளங்கள் அல்லது பேஸ்புக் பதிவுகளுக்குச் செல்பவர்கள் பலர்.

அவர்கள் ஒன்றும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புவதுடன் விஷயம் முடிந்து விடவில்லை. இந்த விஷயத்தின் மறுபக்கத்தில் ஹெக்கர்கள் பெருமளவிலான பணத்தை அள்ளுகின்றனர்.

அதாவது "குறிப்பிட்ட வீடியோவைப் பார்க்க வேண்டுமானால் உங்கள் சுயவிபரங்கள் வேண்டும்.இது ஒரு கணக்கெடுப்பு. எனவே, உங்கள் சுயவிபரங்களை சரிபார்க்க அனுமதி தரவும் "என்று விதிக்கப்படும் நிபந்தனைகளை நம்பி, வீடியோ பார்க்கும் ஆர்வத்தில் தகவல்களை அளித்தால் அவ்வளவுதான்.

ஹெக்கர்கள் உங்கள் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைக் கறந்து விடுவார்கள். இந்தத் தகவல்களை வைத்துப் பெரிய அளவில் பணம் சம்பாதித்துவிடுவார்கள்.இந்த விஷயத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மல்வேர் மென்பொருள் நிபுணர் கிறிஸ் பாய்டு எச்சரித்துள்ளார்.

எனவே, இதுபேன்ற வீடியோ பதிவுகளில் 'லைக்' செய்திருந்தாலோ, பகிர்ந்திருந்தாலோ அவற்றை அழித்து விடுவதுடன், கையோடு கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) மாற்றிவிடுவது நலம் என்று இணைய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :