கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாளிகைக்காடுஆலிம் வீதிக்கான குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு ஆலிம் வீதி முன்றலில் இன்றுஇடம்பெற்றது.
மீனவ சங்க பிரதிநிதி எம்.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குடிநீர்இணைப்பினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் செயலாளர் ஜமால்நௌஷாட் உள்ளிட்ட இளைஞர்கள், பெண்கள் என பலரும கலந்து கொண்டனர்.
மாளிகைக்காடு ஆலிம் வீதியில் வசிக்கும் மக்கள் குடும்பத்தினர் தங்களது வீதியில் குடிநீர்இணைப்பு பெறுவதற்கான குழாய் பொறுத்தப்பட வில்;லை என கிழக்கு மாகாண சபைஉறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து மேற்படி வீதிக்கு அவரதுநிதி ஒதுக்கீட்டின் மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
.jpg)

0 comments :
Post a Comment