கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது



எஸ்.அஷ்ரப்கான்-ட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேசங்களின் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் இதுவரையும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது என இஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கிழக்கு மாகாணத்தில் வாழும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசங்களில் வாழும்மக்கள் பல வழிகளிலும் நன்மை பெறக்கூடிய இத்திட்டம் அரசாங்கத்தினால் இதுவரை கவனத்தில் எடுக்கப்படாமல்இருக்கின்றது.

மட்டக்களப்பு வரையிலுள்ள ரயில் பாதையானது பொத்துவில் வரை விஸ்த்தரிக்கப்படல் வேண்டும். கிழக்கில்மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கரையோர மக்கள் பல வழிகளிலும் நன்மையடைய வேண்டும் இதற்குமட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் சேவைக்குரிய பாதை உருவாக்கப்படல் வேண்டும் என்றதூரநோக்கு சிந்தனையுடன் கடந்த 1992 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் முன்னாள் வர்த்தகவாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் அத்திட்டம் பின்வந்த எந்த அரசியல்வாதிகளாலும் கவனத்தில் எடுக்கப்படாமல் உள்ளது.

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான தூரம் சுமார் 120 கிலோ மீற்றர்களுக்குட்பட்டதாகும்.இக்குருகிய துார இரயில் பாதையை அமைக்குமிடத்து பொத்துவில் அக்கரைப்பற்று கல்முனை களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் இலகுவாக குறைந்த செலவில் தமது பிரயாணங்களைசெய்துகொண்டிருப்பார்கள். தற்போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு வரை பயணம் செய்து இரயிலில் பயணம் செய்யவேண்டிய நிலை காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் வாழும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசங்களில் வாழும்மக்கள் பல வழிகளிலும் நன்மை பெறக்கூடிய இத்திட்டம் இதுவரை தற்போதய அரசங்கத்தினால் கவனத்தில்எடுக்கப்படாமல் இருப்பது ஏன்? இப்பிரதசங்களில் அபிவிருத்தி வேலைகள் நடத்தப்படுகின்றன என ஒரு சிலஅரசியல்வாதிகளால் மக்களுக்கு காட்டப்படுகின்றன. ஆனால் மிக முக்கிய தேவையாகக் கருதப்படும் இத்தேவை குறித்து யாரும் நடைமுறைச்சாத்தியமான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஆரோக்கியமானதல்ல.

எனவே, நடைமுறைச்சாத்தியமான இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரத்திலிருக்கும் அரசியல்வாதிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறோம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :