சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கலாம் எனக்கூறுவது பிரதேச வாதமாகுமா? - முபாறக்



பிரதேச வாதம் என்றால் என்ன என்று நாம் தெரியு முன் தேசிய வாதம் என்றால் என்ன என்பதைப்பார்த்து இதனையும் புரிந்து கொள்ளலாம்.

தேசிய வாதம் என்பது ஒரு தேசத்தை அந்த தேசத்தவர்களே ஆள வேண்டும் என்பதுதான். இதே போல் ஒரு பிரதேசத்தை அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆள வேண்டும் என்பதே பிரதேச வாதமாகும். தேசிய வாதம் காரணமாகவே இந்தியா, இலங்கை என்பன பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

இதன் காரணமாக இன்னொரு தேசத்தை ஆள நினைத்தவர்களுக்கு அது பாதகமாகவும், தாமே தமது தேசத்தை ஆள வேண்டும் என நினைத்தவர்களுக்கு சாதகமாகவும் அமைந்தது. ஆக தேசியவாதத்தால் நன்மை தீமை என்பது சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை வைத்தே தீர்மாணிக்கப்படும்.

அதே போல் ஒரு பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தின் நன்மைகள் அந்த பிரதேச மக்களால் கொண்டு வருவதை இலகுபடுத்துவதற்காகவே பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு பிரதேச சபை கேட்பது என்பது பிரதேச வாதம்தான். அந்த வாதத்தினால் சாய்ந்தமருது மக்களுக்கு நன்மை உண்டு. தெற்கிலிருந்து கொண்டு சாய்ந்தமருதை ஆள நினைப்பவர்களுக்கு தீமை உண்டு.

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையை விட வலுவான பிரதேச செயலகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதேச சபை என்பது தரம் குறைந்ததுதான். பிரதேச சபையின் ஆட்சியை அரசாங்கத்தால் கலைக்க முடியம். பிரதேச செயலகத்தை கலைக்க முடியாது.

சிராஸ் கல்முனை மேயராக இருந்த போது கல்முனை நகரின் வருமானத்தை அவர் சாய்ந்தமருதில் கொட்டுவதாக கல்முனை மக்கள் பலர் பகிரங்கமாக பேசிக்கொண்டார்கள். அதாவது கல்முனையின் வருமானத்தை கல்முனையின் ஒரு பகுதியான சாய்ந்தமருதுக்கு கொடுப்பதை கல்முனை முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தார்கள். 

அதே வேளை சாய்ந்தமருது மக்கள் தமதூர் வருமானத்தை வைத்து தமதூருக்கு தாமே சேவை செய்ய பிரதேச சபை கேட்டால் அதற்கும் முடியாது என கூறுவது நியாயமானதல்ல.

நபியவர்கள் பூனை விடயத்தில் நரகம் போன ஒரு பெண்ணை பற்றி குறிப்பிட்டார்கள். அவள் அந்தப்பூனையை அடைத்து வைத்து அதற்கு உணவும் அளிக்கவில்லை. அது வெளியே சென்று உணவு தேட விடவும் விடவில்லை. இப்படியான நரகத்துக்குப் போகும் வேலையைத்தான் முஸ்லிம் காங்கிரசினர் சாய்ந்தமருது மக்கள் விடயத்தில் செய்கிறார்கள்.


அத்துடன் பிரதேச வாதம் என்பது இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட ஒன்றலல்ல. மக்களே மக்களை அள வேண்டும் என்பது போல் ஒரு பிரதேசத்தை அந்த பிரதேச மக்களே ஆள வேண்டும் என்பது இஸ்லாத்தில் வரவேற்கப்பட்ட விடயமாகும்.

முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
முஸ்லிம் மக்கள் கட்சி
கல்முனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :