சம்மாந்துறை ஜம்யியதுல் உலமாவினால் மழை வேண்டி விஷேட துஆப் பிராத்தனை நிகழ்வு - படங்கள்





ஏ.ஜே.எம்.ஹனீபா-

லக நீர் தினத்தையிட்டும் நாட்டில் நிலவுகின்ற வறட்சியினையிட்டும் சம்மாந்துறை ஜம்யியதுல் உலம சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மழை வேண்டிய விஷேட துஆப் பிராத்தனை நிகழ்வு நேற்று (22) சம்மாந்துறை ஜம்யியதுல் உலம சபையின் கட்டிடத்தில் ஜம்யியதுல் உலம சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச வைத்தியத்துறை சமூக சேவைகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியின் தலைவர் கலாநிதி ஐ.எம்.இப்றாஹீம், விவசாய திணைக்களத்தின் சிரேஷ;ட மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.எம்.ஜெமீல், பொரும்பாக உத்தியோகத்தர் வை.ஏ.கபூர், நீர்பாசனத்திணைக்களத்தின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் பஸீர், விவசாயப் போதனாசிரியர்களான ஏ.அப்துல் மஜீட், ஏ.எல்.எம்பரீட், நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவர் மௌலவி யூ.எல்.மஹ்றூப் மதனி உட்பட உலமாக்கள், விவசாய அமைப்புக்களில் தலைவர்கள் விவசாயப் பொதுமக்கள் என கூடுதலானோர் கலந்து கொண்டனர்.

இந்த விஷேட துஆப் பிராத்தனை வைபவத்தில் விஷேட உரையினை மௌலவி எம்.ஏ.ஏ.எம்.அலிஅஹமட் றசாதி அவர்கள் நிகழ்ததினார் விஷேட துஆப்பிராத்தனை நிகழ்வை அல் ஹாபிழ் மௌலவி ஹச்சுமுஹம்மட் அவர்கள் நடாத்தினார்கள்.

விஷேடமாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, உலமா சபை என்பவற்றின் தீர்மானங்களுக்கு அமைவாக 23ம் திகதி இன்றைய சுபஹ் தொழுகையினை தொடர்ந்து சகல பள்ளிவாசல்களிலும் ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் விஷேட துஆப் பிராத்தனைகளை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :