எம்.பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை சமூர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யபட்ட 'ரட்ட விருவோ' வீடமைப்புக் கடன் வழங்கி வைக்கும் நிகழ்வு வங்கி முகாமையாளர் பீ.கமலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (04) சமூர்ததி வங்கியில் இடம்பெற்றபோது சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சீ.தஸ்லீம், வங்கி முகாமையாளர் பீ.கமலேஸ்வரன் ஆகியோர் சமூர்த்தி பயனுகரி குடும்பங்களுக்கு 3 இலட்சம் ரூபாவினை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் சமூக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எஸ்.எம்.உனைஸ் வங்கி உதவி முகாமையாளர் எம்.ஏ.எல்.எம்.றிஸ்வான் வலய உதவி முகாமையாளர் ஏ.ஜே.எம்.அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)

0 comments :
Post a Comment