பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் அமைப்பாளருமான இல்மி அஹமத் லெவ்வையின் வேண்டுகோளுக்கிணங்க நீதி அமைச்சர் றவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவானாக காத்தான்குடி தாருள் அதர் அமைப்பின் செயலாளரும் ,காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையின் பட்டதாரி ஆசிரியருமான எம். எஸ். எம் நிஸார் நியமிக்கப்பட்டுள்ளார்
மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவான நியமிக்கப்பட்ட எம். எஸ். எம் நிஸாருக்கு நியமன பத்திரத்தினை இல்மி அஹமட் லெவ்வை தாருள் அதர் அமைப்பின் காரியாலயத்தில் வைத்து அண்மையில் கையளித்தார்.
இதில் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பிரதித்தலைவர் அப்துல் நஸார், உப செயலாளர் முஸம்மில் மற்றும் தாருள் அதர் அமைப்பின் தலைவர் ரவுப்,ஸாஜில் நியூஸ் ஊடக வலயமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பஸால் உட்பட அதன் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment