எம்.பைஷல் இஸ்மாயில்-
கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீரின் அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவின் பிரபல முதலீட்டுக் கம்பனியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய தூதுக் குழுவினர் இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள முக்கிய இடங்கள் பலவற்றிற்குச் சென்று ஸ்தலங்களைப் பார்வையிட்டனர்.
அப்துல் றஊப் அல் -இஸாயி தலைமையில் ஒலுவில் துறைமுகத்திற்கு வருகை தந்த தூதுக் குழுவினரிடம் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ எல் எம் நசீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியதுடன், பல்வேறு துறைகளுக்கான முதலீட்டு நடவடிக்கைகளுக்குரிய ஆலோசனைகளும் இதன்போது பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உபதவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா, உறுப்பினர்களான அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ்,என்.எல்.யாசிர் ஐமன் ஆகியோம் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment