கல்முனையின் அதிகாரத்தை தக்கவைக்க வேண்டுமெனில் மருதமுனைக்கும் பிரதேசபை அவசியம்- நாபீர்

அ.றஹ்மான்-

ற்போது கிழக்கு மாகாண அரசியலில் அதுவும் குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்து வலுப்பெற்று வரும் கோரிக்கையான சாய்ந்தமருத்துக்கான பிரதேச சபை வழங்குவது தொடர்பாக நாபீர் சமூக நலன்புரி அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் யூ.கே.நாபீர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்.

முப்பத்தைந்து வருட எமது சாய்ந்தமருதிர்க்கான பிரதேச சபை கனவை சிதைக்க நினைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு இன்னும் எமது சமூகத்தில் அங்கீகாரமா? நிச்சயமாக இவ் வியாபாரிகளுக்கு இடமளித்தல் கூடாது.

எமது கல்முனை மாநகர் கிழக்கு மாகாணத்தின் தலைநகராகும் சில வங்குரோத்து பிடித்த அரசியல் வாதிகளின் தான்தோன்றித்தனமான செயற்ப்பாடுகள் மூலம் எமது கல்முனை மாநகரை சிதைப்பதற்கு எவரும் எத்தனித்தால் கூடாது.சாய்ந்தமருதுக்கான பிரதேச சபைக் கோரிக்கை கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும் இது காலத்தின் தேவையாகும் இதை பெரிது படுத்தி சுயலாப அரசியல் செய்ய எத்தனிக்கும் எந்த நபருக்கும் இத்தருணத்தில் இடமளித்தல் கூடாது. சாய்ந்த மருதுக்கான பிரதேச சபை வழங்கும் பொருட்டு மருதமுனைக்கும் தனியான தொரு பிரதேசசபை வழங்குவதன் மூலம் கல்முனை நகரின் தனித்துவம் மற்றும் அரசியல் அதிகாரம் சிதைவடையாமல் பாதுகாக்கலாம்.

மருதமுனை நகர் அரசியல் அதிகாரம் ஏதும் இன்றி புறக்கணிக்கப்பட்டு வரும் நகராகும் அதே நேரம் அதையொட்டிய பிரதேசமாகிய பாண்டிருப்பு, பெரிய நீலாவணை போன்ற பிரதேசங்களை அதனுடன் இணைத்து மருதமுனைக்கான பிரதேச சபையை வழங்குவதன் மூலம் எமது கல்முனை மாநகரின் அதிகாரம் எந்த வகையிலும் சிதைவடையாது. அபிவிருத்தில் பின்தங்கி நிற்கும் இப்பிரதேசத்தை முன்னேற்றுவது இன்றைய அரசியல் வாதிகளின் குறிப்பாக அமைச்சர்களின் கடமையாகும் மாறாக தனி நபர்களின் அரசியல் அட்டவணைக் கேற்றவாறு சுயலாப அரசியல் காய் நகர்த்தல்களுக்கு ஒருபோதும் இடமளித்தலாகாது.

மேலும் அல்ஹாஜ் யூ.கே.நாபீர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கல்முனை பிரதேசத்தில் எவ்வித பிரிவினைகளும் இன்றி ஒருதாய் மக்களாக வாழ்ந்து வரும் எம் சகோதரர்களை அரசியல் சுயலாபங்களுக்காக பிரித்தாள நினைப்பது படு பாதகமாகும் இதை குறிப்பிட்ட அரசியல் வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட அரசியல் வாதிகளுக்கு எமது பிரதேச வாழ் மக்கள் கண்டிப்பாக தகுந்த பாடம் கற்ப்பிக்க வேண்டும் அதற்க்கான நேரம் நெருங்கி விட்டது என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :