தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி மாவனல்லை இன்ஷிராஹ் இக்பாலின் 'நிழலைத் தேடி' சமூக நாவல்; நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (27-03-2014) வியாழக்கிழமை பி.ப 1.30 மணிக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொள்கின்றார்.
முதல் பிரதியை எம்.எஸ்.எம்.அஸாறுதீன் பெறவுள்ளார். நூலாய்வுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்தல்லா நிகழ்த்தவுள்ளார்.
பிறை எப்.எம். அறிவிப்பாளர் யூனுஸ் கே ரஹ்மான் நிகழ்சிசியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

.jpg)
0 comments :
Post a Comment