சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை முறியடிப்பதற்கு மாகாணசபை தேர்தலை பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பவும், சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை தோற்கடிக்கவும் மாகாணசபைத் தேர்தலை மக்கள் ஓர் சர்வஜன வாக்கெடுப்பாக கருதி வாக்களிக்க வேண்டும். நாட்டை நேசிக்கும் வேட்பாளர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் நாட்டு மக்கள் 30 ஆண்டுகளாக பீதியில் வாழ்ந்து வந்தனர். பயங்கரவாதத்தை இல்லாதொழித்து சுபீட்சமான இலங்கையை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
புலி பயங்கரவாதத்தை மீள கட்டியெழுப்ப காலனித்துவ ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் ஆளும் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய அனைவரும் இணைந்து செயற்படுவோம் என நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment