த.நவோஜ்-
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவரும், யாழ் பல்கலைக் கழக வேந்தரும், பேராசிரியருமான கலாநிதி.சி.பத்மநாதன் தலைமையில் பலம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக அகில இலங்கை இந்து மாமன்ற தலைவரும், பிரசித்திபெற்ற சட்டத்தரணியுமான கந்தையா நீலகண்டன், அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் கலாநிதி எஸ்.கதிர்காமநாதன், உப தலைவர் சி.தனபாலா, கதிர்காம யாத்திரை அமைப்பு தலைவர் சி.அருளானந்தம், லண்டனின் இருந்து வருகை தந்த சர்வதேச இணைப்பாளர் ஜ.தி.சம்பந்தன், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் பொதுச் செயலாளர் எஸ்.தில்லை நடராசா, துணைப் பொருளாளர் ந.கருணை ஆனந்தன், ஆட்சிக்குழு உறுப்பினர்களான கே.ஜெகதீசன், திருமதி.சரோஜினிதேவி மகேஸ்வரன், திருமதி.பத்மா சோமகாந்தன், திருமதி.நாச்சியார் செல்வநாயகம், ஆ.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனால் நந்திக் கொடி ஏற்றப்பட்டு பொதுக் கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாண பல்கலைக் கழக வேந்தராக நியமிக்கப்பட்டமையை பாராட்டி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவரும், யாழ் பல்கலைக் கழக வேந்தரும், பேராசிரியருமான கலாநிதி.சி.பத்மநாதன் என்பவருக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தாலும், பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனாலும் மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
.jpg)
0 comments :
Post a Comment