விஜய், அஜித்துக்குப் பிறகு ரசிகர்களிடைய அதிக எதிர்பார்ப்புக்குரியவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். காரணம் சிவகார்த்திகேயன் படம் என்றால் பட விநியோஸ்தர்கள் உடனே ஓ.கே சொல்கிறார்கள்.
இதனால் தயாரிப்பாளர்களும் சிவகார்த்திகேயன் என்றால் எவ்வளோ பணம் வேணாலும் போடலாம் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் மான்கராத்தே.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியானது. இப்போதெல்லாம் ஒரு படத்தின் பாடலோ, டீஸரோ, டிரெய்லரோ பத்து லட்சத்திற்கும் (ஒரு மில்லியன்) அதிகமான நபர்களால் யூ டியூப்பில் பார்க்கப்படுவது என்பது ஒரு சாதனையாகவே மாறிவிட்டது.
விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த இந்த சாதனையைத் தற்போது சிவகார்த்திகேயனும் எட்டிப்பிடித்துள்ளார்.
அட ஆமாங்க சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் டிரெய்லரை இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளார்களாம். இதனால் ‘மான் கராத்தே’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்புகள் இருந்து வருவதால் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கலாம்.

0 comments :
Post a Comment