த.நவோஜ்-
மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அறுவைக்காக எருமை மாடுகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 சந்தேக நபர்களை தாம் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடி மாட்டுத் தொழுவத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஏழு எருமை மாடுகளும், இரண்டு எருமை மாட்டுத் தலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் செவ்வாய்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இச்சம்பவத்தை தொடர்ந்து செவ்வாய்கிழமை வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தும் திறக்கப்படாமல் மூடிக் காணப்படுகிறது.
இதனால் இப்பிரதேசத்தில் இறைச்சி உணவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :
Post a Comment