சம்மாந்துறையில் கிராமிய மக்களுக்கான ஒன்று கூடல்

எம்.ரீ.எம்.பர்ஹான்- 

வீரமுனை கிராம சேவகர் பிரிவுகளான 01,02,03,04 என்பவற்றை ஒன்றினைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கிராமிய மக்களுக்கான ஒன்று கூடல் மற்றும் நடமாடும் சேவை 2014.03.15ம் திகதி வீரமுனை ஆர் கே எம் வித்தியாத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம் பெற்றது.

இங்கு பின்வரும் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன

பதிவாளர் பிரிவு, ஆட்பதிவு திணைக்களப்பிரிவு,புவிச்சரிதவியல் பிரிவு, மோட்டார் போக்குவரத்து திணைக்களப்பிரிவு, சுமூக சேவைப்பிரிவு, கலாச்சாரப் பிரிவு, சமூர்த்திப்பிரிவு, திட்டமில் பிரிவு, காணிப்பிரிவு, மீண்பிடி திணைக்களப்பிரிவு, கால்நடை வைத்தியப்பிரிவு, சுகாதாரத்திணைக்களப்பிரிவு, நீர்பாசன திணைக்களப்பிரிவு, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபை பிரிவு, இலங்கை மின்சார சபைப்பிரிவு, வெளிநாட்டு வேளை வாய்ப்பு மற்றும் நலன் புரி அமைச்சுப்பிரிவு, வங்கிச் சேவைப்பிரிவு,அரசமரக் கூட்டுத்தாபனப்பிரிவு.

இந்நிகழ்வில் அதிகதிகளாக சம்மாந்துறை பிரதேச சபைத்தவிசாளரும் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பளரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம் நௌசாட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் அங்கு அங்கு உரையாற்றிய தவிசாளர் அவர்கள் இந் நடமாடும் வேவை மூலம் மக்களின் குறைகளை இனம் கண்டு அவர்களுக்கான வீதிஇ,குடிநீர்இ போக்குவரத்து மற்றும் வாழ்வாதார அபிவித்திகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 

நடமாடும் சேவையின் இரண்டாம் கட்ட நிகழ்வு கலரச்சல் பகுதில் 2013.03.16 இடம்பெற்றதுடன் மூன்றாம் கட்ட நிகழ்வு 2014.03.17ம் திகதி சம்மாந்துறை மலயடிக்கிரமத்திலும் நான்காம் கட்ட நிழ்வு இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :