சிறு போக வேளாமை செய்வதற்கான நீர்முகாமைத்துவ பங்கீடு தொடர்பாக உயர்மட்டக் கூட்டம் - படங்கள்

-ஏ.ஜே.எம்.ஹனீபா-

ம்பாறை மாவட்டத்தில் 2014ம் ஆண்டு யால போக அதவது சிறு போக வேளாமை செய்வதற்கான நீர்முகாமைத்துவ பங்கீடு தொடர்பாக உயர்மட்டக் கூட்டம் இன்று (18) செவ்வாய் மாலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் அம்பாறை மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் நிஹால் சிறிவர்தன, பிரதேச செயலாளர்களான ஏ.மன்சூர், திருமதி றிபாஉம்மா ஜலீல், சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று நீர்பாசன பொறியியலாளர்கள், விவசாயப்;திணைக்கள பணிப்பாளர்கள், கமநல சேவை உத்தியோகத்தர்கள், வனவிலங்கு திணைக்கள பணிப்பாளர், பொலிஸ் அதிகாரிகள், பொரும்பாக உத்தியோகத்தர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள். விவசாய அமைப்புக்களின் தலைவர்கள், விவசாயப் பிரதிநிதிகள், விவசாயிகள் என பொருந் தொகையினர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் நிஹால் சிறிவர்தன உரையாற்றுகையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சேனநாயக்க சமுத்திரம் மற்றும் நீர்தாங்கு நிலைகளின் நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதனால் எமது மாவட்டத்திலுள்ள சகல விவசாயக் காணிகளும் செய்கை பன்ன முடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் தற்போதுள்ள நீரின் அளவினைக் கருத்தில் கொண்டு அவற்றில் குடிநீர், வனவிலங்குகளுக்கு தேவையான குடி நீர் என்பவற்றை தேக்கி வைத்து விட்டு எஞ்சிய நீரீ;ன் அடிப்படையில் எமது மாவட்டத்திலுள்ள 120000 ஆயிரம் ஏக்கர் நெற்காணியில் 2014ம் ஆண்டு சிறுபோகத்தில் 35115 எக்கர் மாத்திரம் செய்கை பண்னுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தத் தொகை பின்வருமாறு அமைவதாகவும் தெரிவித்தார் அதாவது அம்பாறையில் 47000 ஏக்கரில் 13190 ஏக்கர் செய்கை பன்னுவதாகவும், அக்கரைப்பற்றில் 34000 ஏக்கரில் 8080 ஏக்கர் செய்கை பன்னுவதாகவும,; சம்மாந்துறைப் பிரதேசத்தில் 25000 ஏக்கரில் 8665 ஏக்கர் செய்கை பன்னுவதாகவும், கல்முனைப்பிரதேசத்தில் 14000 ஏக்கரில் 5180 ஏக்கர் செய்கை பன்னப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இங்கு ஒதுக்கப்பட்டுள்ள செய்கை பன்னப்படவுள்ள காணிகளின் அளவுக்கு ஏற்பவே இந்த வருடம் பயளை மாணியமும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.விமலநாதன் உரையாற்றுகையில் தேசிய உற்பத்தியில் 25 வீதத்தை பூர்த்தி செய்கின்ற மாவட்டம் அம்பாறை மாவட்டமாகும் ஆனால் தற்பொது நாட்டில் நிலவுகின்ற வரட்சி காரணமாக மொத்தமாக தேசிய ரீதியில் 28 வீதமான உற்பத்திகளை பெறக் கூடிய வகையிலேயே இந்தப் போகத்தில் விவசாயம் செய்கை பன்னப்படவுள்ளதாகவம் தெரிவித்தார்.

எனவே மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் தீர்மானத்துக்கு விவசாயிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார் ஏனைய காணிகளில் ஏனைய உப உணவுப் பயிர் செய்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக அமைச்சரவையிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வகையில் சோளம், கச்சான், பயறு, கௌபி பொன்றவற்றை செய்கை பன்னவள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்து அம்பாறை மாவட்ட விவசாயிகள் எதிர் நோக்கி வருகின்ற காட்டுயானைகளின் தாக்கத்திலிருந்த மக்களையும் பயிர்களையும் பாதுகாக்கும் வகையிலான யானை வேலி அமைப்புக்காக பொரளாதார அபிவிருத்தி அமைச்சினால் 20 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை விரைவில் நடைமுறைப்படுத்தவள்ளதாகவம் தெரிவித்ததார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :