நிந்தவூர் கடலில் பிடிபட்ட 140 கிலோ நிறையுடைய "வெள்ளை கொப்புறு மீன்" - படங்கள்

 சுலைமான் றாபி-
ரையோரப் பிரதேசங்களில் தற்போது அதிகளவான மீன்கள் பிடிபடும் காலப்பகுதியில் இன்று (18.03.2014) காலையில் நிந்தவூர் கடலில் கொப்புறு மீன் இனத்தினைச்சேர்ந்த மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.

04 அடி நீளமானதும் 140 கிலோ கிறாம் நிறையுடயதுமான இந்த மீன் இரண்டு வகைகளைக் கொண்டுள்ளதாகவும் அதில் வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களிலே இது காணப்படுவதாகவும் மீனவர் ஏ. சாஜஹான் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை இந்த அரியவகை மீனினம் படகுகள் மூலமாக ஆழ்கடலுக்குச் சென்றே பிடிக்க முடியும் என்றும் அதிஷ்டவசமாக இந்த மீன் கரைவலையில் பிடிபட்டதாகவும் இதில் ஒரு மீன் வலையினைப் பிய்த்துக் கொண்டு தப்பிச்சென்றதாகவும், மேலும் இந்த வெள்ளை கொப்புறு மீன் தற்போது ரூபா 53,000/= கேள்வி விலையில் உள்ளதாகவும் அந்த மீனவர் மேலும் தெரிவித்தார்.

இம்போர்ட் மிரர் செய்திகளுக்காக நிந்தவூரில் இருந்து சுலைமான் றாபி




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :