கணவன்–மனைவிடையே அடிக்கடி சண்டை - மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்



தேனி அருகே போடி போலீஸ் சரகம் மறவபட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் மணிகண்டன்(வயது 28). டிரைவர். இவருக்கும், கேரள மாநிலம் வட்டவடை கோவிலூரை சேர்ந்த தங்கப்பன் மகள் கணபதி அம்மாளுக்கும்(23) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன் மணிகண்டன் மனைவியுடன் போடிக்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள பெரிய பள்ளிவாசல் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 3 தினங்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. கணபதி அம்மாள் நடமாட்டமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீட்டிற்குள் இருந்த சாக்குமூட்டையில் இருந்து ரத்தம் வழிந்தோடி இருந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் போடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சப்–இன்ஸ்பெக்டர் பிச்சைமணி மற்றும் போலீசார் அங்கு வந்து வீட்டை திறந்து சாக்குமூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில் கணபதி அம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

போலீசார் கணபதி அம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணபதி அம்மாளின் கணவர் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். எனவே அவர்தான் மனைவியை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். உடலை சாக்குமூட்டையில் கட்டி அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளார். 

அது நிறைவேறாமல் போகவே வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் எதற்காக மனைவியை கொலை செய்தார்? என்று தெரியவில்லை.

கணவன்–மனைவி இடையே கடந்த 2 மாதங்களாக அடிக்கடி சண்டை நடந்து வந்தது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மனைவியை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். கணபதி அம்மாளுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :