இ
லங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இன்று சார்ஜாவில் ஆரம்பமான தீர்க்கமான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இன்று சார்ஜாவில் ஆரம்பமான தீர்க்கமான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
தொடரைக் கைப்பற்ற இலங்கை இப்போட்டியில் பாகிஸ்தானின் வெற்றியை தடுக்க வேண்டியும் இலங்கையின் வெற்றியை தடுக்க பாகிஸ்தான் இப்போட்டியை வெற்றி கொள்ள வேண்டியும் உள்ளதனால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை-– பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. இதில் தொடரின் முதல் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிந்த அதே வேளை டுபாயில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி வெற்றி கொண்டது.
இந்நிலையில் தொடரின் 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.
0 comments :
Post a Comment